மட்டு மாவட்ட சமுர்த்தி மீளாய்வு கூட்டம் பணிப்பாளர் தலைமையில்.....
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி செயலக உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் (02) மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்யோகத்தர்களின் பணிகளின் முன்னேற்றம் மற்றும் மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கான பணிகள், சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள், எதிர்கால வாழ்வாதார திட்டங்கள் போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன் போது மக்களின் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பான திறன் அபிவிருத்தி கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு சீன நாட்டிற்கு பயணமாகி, வந்தடைந்த மாவட்ட பணிப்பாளர் தம் அனுபவத்தை பகிர்ந்து கொண்டது விசேட அம்சமாக இருந்தது.
இவ்வாராந்த கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் ஏ.எம்.பஸீர் அவர்களும் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment