வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைப்பு...

 வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கி வைப்பு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தலைமையில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் (10) இடம் பெற்றது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் இணைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் 213 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.
ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், பொது சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடத்திலும் சித்தி பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார அசாதாரண சூழ்நிலையில் எமது நாட்டுக்கு அந்தியசெலவானியை பெற்றுத்தரும் வீரர்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதில் பெறுமை அடைவதாக
தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.விமலவீர, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், அமைச்சின் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.







Comments