முன்னுதாரணமாக செயற்பட்ட கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகம்.........

 முன்னுதாரணமாக செயற்பட்ட கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகம்.........

"மக்கள் சேவையே மகேசன் சேவை - ஏழையின் சிரிபினில் இறைவனை காண்போம்" எனும் சான்றோர் வாக்கிற்கு அமைவாக ஈழத்தில் உள்ள சிவாலயங்களில் தொன்மை வாய்ந்ததும், தேரோடும் ஆலயம் என அனைவராலும் போற்றப்படும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரால் ஆலயத்திற்கு நேர்த்திக்கடனாக கிடைக்கப்பெற்ற பசுக்களை வறுமையான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வறுமையான குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு "ஒரு பசு வழங்கல் வேலைத்திட்டம் -2023 எனும் திட்டத்திற்கு அமைவாக முதற்கட்டமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகம் வெல்லாவெளி, மண்முனை மேற்கு பிரதேச செயலகம் - வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் - செங்கலடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து பிரதேச செயலாளர் ஊடாக தெரிவு செய்யப்பட்ட தலா இரண்டு (02) குடும்பங்கள் வீதம் மொத்தமாக ஆறு (06) குடும்பங்களிற்கு பசுக்கள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் ஆலய தலைவர் வண்ணக்கர் இ.மேகராசா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வணக்கத்துக்குரிய ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள், செயலாளர் வண்ணக்கர் சி.கங்காதரன், பொருளாளர் வண்ணக்கர் ச.கோகுலகிருஸ்னன், தேசமகா சபை உறுப்பினர்கள், குடிசார்ந்த தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் பயனாளிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.




Comments