பட்டிருப்பு வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட வலயமட்ட சிறுவர் விளையாட்டுப்போட்டி .....

பட்டிருப்பு வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட  வலயமட்ட சிறுவர் விளையாட்டுப்போட்டி .....

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளின் வலய மட்ட சிறுவர் விளையாட்டுப்போட்டி  களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் (03) நடைபெற்றது.

பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட மண்முனை தென் எருவில்பற்று கல்விக் கோட்டம், போரதீவுப்பற்று கல்விக்கோட்டம் ஆகியவற்றுக்குட்பட்ட ஆரம்பப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மாகாண விளையாட்டுப் போட்டிக்கு செல்லவுள்ளதுடன், சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பட்டிருப்புவலயக் கல்விப் பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்இ உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments