பிலிப்பைன்ஸ் நாட்டில் நம்மவர் சாதனை படைக்க தயாராகின்றார், மாவட்ட செயலக விளையாட்டு பயிற்றுவிப்பாளர்....

 பிலிப்பைன்ஸ் நாட்டில் நம்மவர் சாதனை படைக்க தயாராகின்றார், மாவட்ட செயலக விளையாட்டு பயிற்றுவிப்பாளர்....

களுதாவளையை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட மட்டக்களப்பு  மாவட்ட செயலக விளையாட்டு பயிற்றுவிப்பாளரான  பஞ்சாட்சரம் ஜெயக்குமார் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் நவம்பர் 05ம் திகதி தொடக்கம் 13ம் திகதி  வரை நடைபெறவுள்ள 22வது Asia Masters Athletes. Championship -2023 போட்டியில் பங்குபற்றி சாதனை படைக்க வருகின்றார்.

வயது மூத்தொருக்கான இப்போட்டிகளில் அவர் 100M, நீளம் பாய்தல், கோலலூன்றிப் பாய்தல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

இவர் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்திற்காக பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் விளையாட்டு செயற்பாடுகளில் மாவட்ட செயலகத்துடன் இணைந்து செயலாற்றி பல வெற்றிகளுக்கு வித்திட்டவர். இவர் இப் போட்டிகளில் வெற்றிவாகை சூடி எமது நாட்டிற்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் புகழ் சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Comments