மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இரத்ததான நிகழ்வு..........

 மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இரத்ததான நிகழ்வு..........

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த வங்கி குருதி குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு புனித மெதடித்த மத்திய கல்லூரியில் கல்லூரியின் பழைய மாணவர்கள்கள் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .
கல்லூரியின் 2015 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்லூரி வளவில் இடம் பெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கிழக்கு பல்கலைக் கழகத்தின் தாதியர்கற்கை மாணவர்கள், கல்லடி சிவானந்தா மற்றும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் பொது மக்கள் என வேறு பாடுகள் இன்றி இந்து, இஸ்லாம், பௌத்த, கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்டோர் இங்கு வந்து இரத்த தானம் செய்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் டாக்டர் பிரஷ்னவி தலைமையிலான குழு இந்த இரத்ததான நிகழ்வில் குருதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரியின் அதிபர் கே.பாஸ்கர், பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் யூ.மயூரன் உள்ளிட்ட மாணவர் சங்கத்தின் பல பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னமாக இருந்தனர்.




Comments