தேசிய வறுமை ஒழிப்பு வாரம்: காத்தான்குடி சமுர்த்தி பிரிவால் பல நிகழ்வுகள்....

 தேசிய வறுமை ஒழிப்பு வாரம்: காத்தான்குடி சமுர்த்தி பிரிவால் பல நிகழ்வுகள்....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திருமதி ஆரிபா ஜபருல்லாஹ் அவர்களால் தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு  காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி வேலைத்திட்டத்தின் பல நிகழ்வுகளில் (23) கலந்து சிறப்பித்தார்.

ஒக்டோபர் 17ம் திகதி தொடக்கம் நாடு பூராவும் சமுர்த்தி வறுமை ஒழிப்பு வாரம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.  காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் அவர்களின் தலைமையில் அருணளுக் கடன் வழங்கும் நிகழ்வும், சிறுவர் சேமிப்புக்கான உண்டியல்கள் வழங்கும் நிகழ்வும், வீடுகள் கையளிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் திருமதி ஆரிபா ஜபருல்லாஹ்,  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அருணளுக் கடன்கள் மற்றும் சிறுவர் சேமிப்புக்கான உண்டியல்ககள், சிறுவர் சேமிப்பு புத்தகங்ககள் மற்றும் வீடுகளை கையளித்தனர்.  

இதன் போது ஆறு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு நான்கு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா கடன் வழங்கப்பட்டதோடு, சிறுவர் சேமிப்புக்கான உண்டியல்கள், சிறுவர் சேமிப்பு புத்தகங்களும், மூன்று ஜயமன வீடுகளும், ஒரு ரன்விமன வீடும் பயனாளிகளிடம் வழங்கி வைக்கப்பட்டது.  

 இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமைய முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Comments