ஏறாவூரில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியொன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்புக்கடவையில்லாத நிலையில் இடம்பெறும் விபத்துகள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
(03) மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே முச்சக்கர வண்டி மோதுண்டது. ஏறாவூர் மிச்நகர் பகுதியில் ரயில் கடவை வீதியை கடக்க முயன்ற போதே இவ் விபத்து சம்பவித்துள்ளது.
சம்பத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான, அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment