சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கு நான்காம் கொளனி சின்னமடுமாதா ஆலயத்திருவிழா........

 சொறிக்கல்முனை திருச்சிலுவை  திருத்தல துணைப்பங்கு நான்காம் கொளனி சின்னமடுமாதா ஆலயத்திருவிழா........

(டினேஸ்)

சொறிக்கல்முனை திருச்சிலுவை  திருத்தல துணைப்பங்கு நான்காம் கொளனி சின்னமடுமாதா திருவிழா திருப்பலியானது  28ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுக்கு வந்தது.

29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து காலை 6 மணிக்கு இறைமக்களினால் பாதயாத்திரை இடம்பெற்றதோடு,  சொறிக்கல்முனை சின்னமடுமாதா ஆலயத்தில் காலை 7:30 மணிக்கு  அருட்பணி  சுரேந்திரக்குமார் அடிகளார்  மற்றும் பங்குத்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன்  அடிகளாரின் தலைமையிலும் திருவிழா கூட்டுத்திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

இறுதியில் மாதாவின் திருவுருவம் ஆலயத்தைச் சுற்றி பவணியாக கொண்டுவரப்பட்டு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுக்கு வந்தது.  இதில் பல பெருந்திரளான இறைமக்கள் கலந்து கொண்டதுடன் இறைமக்களுக்கான அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.










Comments