மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் நவராத்திரி விழா ஆரம்பம்.....

 மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் நவராத்திரி விழா ஆரம்பம்.....

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆசிரமத்தில் நவராத்திரி விழா ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆசிரமத்தின் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ துர்கா தேவியின் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், கொலு பொம்மைகளும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது.
சப்தமி தினத்தன்று அபிராமி அந்தாதி பாராயணம் நடைபெற உள்ளதுடன், அஷ்டமி தினமாகிய ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், அன்று மாலை நலங்களை சேர்க்கும் திருவிளக்குப் பூஜை நடைபெறவுள்ளது.
நவமி தினமாகிய திங்கட்கிழமை மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும், வழமை போல தசமி தினத்தன்று மாணவர்களுக்கு ஏடு தொடக்கும் வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments