மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வாணி விழா..........
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வாணி விழா இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் கல்லூரியின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் வாணி விழா மிக விமர்சையாக இடம் பெற்றது.
இவ் விழாவில், கலை, கலாசாரம் சார்ந்த நாடகம், நடனம், பாடல்கள் என்பன முதலாம் மற்றும் இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களால் அரங்கேறப்பட்டது.
Comments
Post a Comment