சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு வீடு கையளிப்பு........
சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 2023.மே மாதத்திற்கான லொட்டரியில் வெற்றி பெற்ற பயனாளியின் வீடு புணரமைக்கப்பட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்களினால் இன்று (01) உரிய பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா, சமுர்த்தி தலைமையைக முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீ்ர், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.சி சாதிக்கீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment