இன்றைய காலங்களில் சிறுவர்கள் பசி, பட்டினி, அநாதரவான நிலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்:மட்டு சமுர்த்தி பணிப்பாளர்.

 இன்றைய காலங்களில் சிறுவர்கள் பசி, பட்டினி,  அநாதரவான நிலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்:மட்டு சமுர்த்தி பணிப்பாளர்.

இன்றைய காலங்களில் சிறுவர்கள் பசி, பட்டினி,  அநாதரவான நிலை என்பவற்றில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்ட போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில், காத்தான்குடி  பிரதேச செயலாளர் U.உதயசிறிதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள் (01) நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் சிறுவர் தின செய்தியை தெரிவித்து உரையாற்றினார் அவர் உரையாற்றும் போது,

ஒருநாட்டின் விசேட கவனிப்புக்கு உரியவர்களாக சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள், வலது குறைந்தவர்கள் காணப்படுகின்றார்கள். அதனால் தான் எமது நாட்டிலும் அவர்களுக்கான விசேட சட்டங்கள் காணப்படுகின்றன. சிறுவர்களுக்கான பல உரிமைகள் காணப்படுகின்றன முக்கியமாக சிறுவர்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதற்கான உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை,  உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் அவர்களுக்கு காணப்படுகின்றன. 

சிறுவர்கள் பசி,  பட்டினி,  அநாதரவான நிலை என்பவற்றில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு துஸ்ப்பிரயோகங்கள் எமது நாட்டின்  எல்லாப் பகுதிகளிலும் இருந்தும் எல்லாச் சமூகங்களில் இருந்தும் அறிக்கையிடப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அவர்களது உள்ளத்தையும் ஆளுமையையும் பாதிக்கும் இந்த வெறுக்கத்தக்க விடயங்கள் நிறுத்தப்பட வேண்டியவை, சிறுவர்கள் துஸ்ப்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான பொறுப்பு குடும்பம், பாடசாலை, ஆன்மீக நிறுவனங்கள், ஏனைய சமூக நிறுவனங்கள், அரசநிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொறுப்பானதாகும்.

 இன்றைய சூழலில் போதைப் பொருள் பாவனை அனைத்துச் சமூகங்களிலும் ஊடுருவி உள்ளதோடு அது குடும்பங்களிலும் குடும்ப கட்டமைப்பிலும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துவதோடு சிறுவர்களுக்கும் அதனால் பல்வேறு பாதிப்புக்கள் விளைகின்றன. சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போதை என்கின்ற பொது எதிரிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவையும் நம் அனைவருக்கும் உள்ளது. சிறுவர்களின் கனவுகளை, அவர்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான உலகத்தை அவர்களுக்கு வழங்குவதனை உறுதிப்படுத்தும் வண்ணம் எங்களுடைய பொறுப்பை உணர்ந்து நாம் அனைவரும் கடமையாற்றுவோம் என தெரிவித்தார்.

இதன் போது சிறுவர்களின்  ஆற்றலை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளும், பிரதேச செயலக கெக்குழு பொட்டிகளில் வெற்றி பெற்றிவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது 

 இச்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments