9 வயது சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த 83 வயது வயோதிபர் கைது......
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டைபுரிந்த 83 வயதுடைய ஒருவரை புதன்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள 9 வயது சிறுமி மீது 83 வயதுடைய முதியவர் பாலியல் சேட்டை புரிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து குறித்த முதியவரை புதன்கிழமை (04) மாலையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment