5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு.......
மட்டக்களப்பில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
பிரமிக்கல்வி நிலையத்தின் பிரதம ஆசிரியரும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட வழிகாட்டி ஆசிரியருமான எஸ்.மோன்ராஜ் தலைமையில் நடைபெற்ற வழிகாட்டல் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்வி பணிப்பாளர் முருகேசபிள்ளை, காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.மோகனசுந்தரம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் தேவதாசன்இ குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலய அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது ஓய்வுபெற்றுச்செல்லவுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்வி பணிப்பாளர் முருகேசபிள்ளையும், மட்;டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் தேவதாசனும் கௌரவிக்கப்பட்டனர்.
கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment