மட்டக்களப்பு மாட்ட செயலகத்தில் சர்வதேச உளநல தின நிகழ்வு - 2023
மட்டக்களப்பு மாட்ட செயலகத்தில் சர்வதேச உளநல தினம் மற்றும் தேசிய உளவளத்துனண தின நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் (17) திகதி இடம் பெற்றது.
மாவட்ட செயலக உளநல பிரிவின் ஏற்பாட்டில் உளவள துறையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்களை விழிப்புணர்வு வழங்கி வலுப்படுத்துவதற்கான செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இவ் வருடத்திற்கான உளநல கருப்பொருளாக "உளநலம் என்பது உலகளாவிய மனித உரிமை" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இதன் போது உளவள வைத்திய நிபுணர் சிந்துஜன் உடல், உள நல ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கருத்துக்களை பரிமாறினார். மேலும் சட்டத்தரணி மயூரி ஜனன் உலகளாவிய மனித உரிமை தொடர்பான சட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.
இந் நிகழ்வில் கல்வி திணைக்கள அதிகாரிகள், மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் நரசிம்மன் ஜனார்த்தனி, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்விற்கான நிதி அனுசரனை லயன்ஸ் கழகம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment