ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாணி விழா - 2023
ஏறாவூர்பற்று பிரதேச செயலக வாணி விழா நிகழ்வு இன்று (23) திகதி விசேட பூசை வழிபாடுகளுடன் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன், கணக்காளர் டிலானி ரேவதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment