மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி சிறுவர் கெக்குளு போட்டி - 2023
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சிறுவர் கெக்குளு போட்டியானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் ஜோசப் வாஸ் பாடசாலையில் (28) திகதி இடம் பெற்றது.
மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச பிரிவுகளில் இருந்து வருகை தந்த மாணவர்களுக்கான பேச்சு, சித்திரம், நாட்டார் பாடல், நடனம், அறிவித்தல், பாடல், நாடகம் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.
பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சிறுவர் கழகங்கள் அனைத்திலுமிருந்து 7 வயதில் இருந்து 18 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கான மாவட்ட மட்ட போட்டியாக இப்போட்டி இடம் பெற்றதுடன், இப்போட்டியில் வெற்றி பெறும் சிறார்கள் தேசிய மட்ட போட்டிகளுக்கு செல்லவுள்ளனர்.
2019ம் ஆண்டிற்கு பிற்பாடு இவ்வருடமே சமுர்த்தி சிறுவர்களுக்கான போட்டிகள் மீண்டும் இடம் பெறுவது கூறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர் எம்.எஸ்.எம்.பசிர், சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப்.மனேகிதராஜ், சமூக அபிவிருத்தி விடய பொறுப்பு முகாமையாளர் கே.புவிதரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக உத்தியோகத்தர்கள், துறைசார் நிபுணர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment