கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் - 2023
கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் (17) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்டத்தில் 4 பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதிகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
வாகரை, வாழைச்சேனை, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிராமிய வீதி அபிவிருத்தி செயற் திட்டங்கள் தொடர்பாகவும் திட்டம் நடைமுறைப்படுத்தும் போது எதிர் நோக்கிய சவால்கள் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
பருவபெயர்ச்சி காலம் ஆரம்பமாக இருப்பதனால் துரிதகதியில் வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் இதன் போது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட பொறியியலாளர் ரி.சுமன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், பிரதேச செயலாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஒப்பந்தகாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment