களுவாஞ்சிகுடியில் சர்வதேச உளவளத்துணை தினத்தினை முன்னிட்டான நிகழ்வுகள் - 2023
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15ம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச உளநல தினத்தினை முன்னிட்டு பல்வேறு கருத்துக்கள், சிந்தனைகளை மையப்படுத்தியதாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுகின்றன.
"அனைவரினதும் உளநலம் மற்றும் நல்வாழ்வை உலக அளவில் முதன்மைப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் அமைந்த இவ்வருடத்திற்கான உளவளத்துணை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் பிரதேச செயலக பிரிவில் ஒழுங்குசெய்ய்யப்பட்டு உளவளத்துணை உத்தியோகத்தரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வடுகின்றது.
அந்த வகையில் மட்/பட்/பெரியகல்லாறு மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கான யோகாசனப் பயிற்சி நிகழ்வுவும், மட்/பட்/ கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் ஆன்மீகம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பரீட்சைக்குத் தயாராகுதல் தொடர்பான நிகழ்வு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் பொதுச்சந்தையில் வீதியோர விழிப்புணர்வு நாடகங்கள், குருக்கள்மடம் அசீசி சிறுவர் இல்லத்தில் 'கலைகள் மற்றும் அரங்க விளையாட்டுகளுடாக ஆற்றுப்படுத்தல்' எனும் தலைப்பிலான பயிற்சிநெறி என்பன பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment