புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவு விழாவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி பங்கேற்பு.....
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை அதிபர் ஜோசப் பெனடிக்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்திருந்தார்.
இதன் போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன், வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன், பாடசாலையில் பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Comments
Post a Comment