அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் இடைநிறுத்திய SLC.......
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மேன்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகரித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில், விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்து மூலமான அறிவுறுத்தல்களை ஆகஸ்ட் 25 ஆம் திகதி வழங்கியுள்ளதாக, ஸ்ரீலங்கா கிரிக்கட் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment