மட்டக்களப்பில் தாதிய உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.......

 மட்டக்களப்பில் தாதிய உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.......

உதவித்தாதியர், முதலுதவி மற்றும் மருத்துவ துறைசார் பயிற்சி நெறியினை நிறைவு செய்த தாதிய உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, (15) இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் நிதியுதவியின் கீழ், கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி பிரிவினால் நிகழ்வு நடாத்தப்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு நடாத்தப்பட்ட பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கே இச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான, கீர்த்தி ஸ்ரீ தேசசக்தி எந்திரி தயாளசீலன் மயூரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் பிரதிநிதி, சிரேஷ்ட வைத்தியர் காந்தா நிரஞ்சன், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் கந்தசாமி அருளானந்தம், குடும்ப நல மருத்துவர் வைத்தியர் நடராஜா நிரஞ்சன், மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்கள் உட்பட பலர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த நிறுவனமானது கடந்த 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பதினொரு வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments