ஏறாவூர் பற்று பிரதேசத்தில் அப்பியாசக் கொப்பிகள் விநியோகம் .............

 ஏறாவூர் பற்று பிரதேசத்தில் அப்பியாசக் கொப்பிகள் விநியோகம் .............

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை மாணவர் சக்தி (சிசுபல) சமூக நலன்கள் திட்டத்தின் கீழ் அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது செங்கலடி பிரதேசத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 734 பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், தலைமையக முகாமையாளர், சமுர்த்தி கருத்திட முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









Comments