இணைசம்பியனாகிய மிக்கல் கல்லூரி -மத்திய கல்லூரி...........

இணைசம்பியனாகிய மிக்கல் கல்லூரி -மத்திய கல்லூரி...........

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் “பாடு மீன்களின் சமர்” மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான 50 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் சமர் (26) காலை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலைகளான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கிரிக்கெட் சமரானது கடந்த 4 வருடங்களாக இடம்பெறாத நிலையில் இம்முறை 10 வது தடவையாக புனித மிக்கல் கல்லூரியின் 150வது ஆண்டை முன்னிட்ட மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடியதில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓவர்களில் 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மத்திய கல்லூரி அணியினர் 28 ஓட்டங்களுடன் 2 விக்கட்டுக்களை இழந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாடு மீன்களின் சமர் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவிற்கு கொணரப்பட்டதுடன் இவ்வாண்டிற்கான பாடு மீன்களின் சமரில் இரண்டு அணிகளும் இணைச் சம்பியன்களாக நடுவர்களினால் அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பியன் கிண்ணமானது இரண்டு அணிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பாடசாலைகளின் அதிபர்களிடம் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மாதிபர் அஜித் ரோகண மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகிய இருவரும் கலந்துகொண்டதுடன், இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிக்கேடயத்தினை வழங்கிவைத்துள்ளார்.







Comments