மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு.......
கிழக்கு மாகாண பேரவைச் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் தமது கடமைகளை இன்று (13) பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாக பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயனாவினால் வழங்கி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயகா, மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம்.மன்சூர், மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் ஐ.எம்.றிக்காஸ் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment