காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது........

 காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது........


மட்டக்களப்பு காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் முஹம்மத் சப்ரி தலைமையில் நடைபெற்றது.

கல்வி உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்த பொறியியல் துறை, மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளி வாயலின் தலைவர் பொறியாளர் ஏ.எம்.தௌபீக், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Comments