சமுர்த்தி உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிள் விபத்தில்பலி............
திருகோணமலை பன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கோமரன்கடவெல பகுதியைச் சேர்ந்த அணில் சதுரசிங்க (வயது 53) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோமரன்கடவெல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த நபர் கடமையை நிறைவு செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது பன்குளம் - 4ம் கண்டம் பகுதியில் வைத்து யானை வீதியை கடக்கையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
காயமடைந்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment