மூன்றாமிடத்தைப்பெற்ற மட்டக்களப்பு மேற்கு வலயம்.....
2022ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மூன்றாமிடம் பெற்றுள்ளது.
கஷ்ட மற்றும் அதிகஷ்ட பாடசாலைகளை மாத்திரம் முற்று முழுதாக உள்ளடக்கி கிழக்கு மாகாணத்தில் பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது அண்மைக்காலங்களில் வெளியாகிய தேசிய பரீட்சை பெறுபேறுகளில் சாதித்து வருகின்றமை கண்கூடு. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் 3 வது இடத்தை பெற்றுள்ளது
Comments
Post a Comment