லாப் கேஸின் விலை அதிகரிப்பு...........
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,835 ரூபாவாகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,535 ரூபாவாகும்.
Comments
Post a Comment