மட்டக்களப்பில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்.......

 மட்டக்களப்பில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்.......

மட்டக்களப்பு கள்ளியங்காடு ரோசைரோ ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் கோருகின்றனர்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கள்ளியங்காடு ரோசைரோ ஒழுங்கை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 7 பவுன் தங்க நகைகளை கொள்ளையிடபட்டுள்ள கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் மட்டக்களப்பு பொலிஸார் இடுபட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான உதவியை; பொது மக்களிடம் மட்டக்களப்பு பொலிஸார் கோருகின்றனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பான தகலல் அறிந்தவர்கள் 065 222 4422, 070 2466355 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

தகவல் வழங்குவோரின் ரகசிய தன்மை பேனப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments