மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் திடீர் விஜயம்!!

 மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் திடீர் விஜயம்!!

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (31) திகதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு புகையிரத நிலையத்தை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்,
இதன் போது நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்பு செயலாளர் மாணிக்கவாசகர் தயாபரன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்கொண்டதுடன், புகையிரத நிலையத்தில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன், அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிவகைகள் தொடர்பாகவும், புகையிரத பாதைகள் அபிவிருத்தி மற்றும் புதிய புகையித சேவைகளை எதிர்காலத்தில் அறிமுகம் செய்வது தொடர்பாகவும் இதன்போது அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.








Comments