மட்டுவில் இன்றும் இரண்டாவது நாளாக களை கட்டும் கடற்கரை உதைபந்தாட்டம்......

 மட்டுவில் இன்றும் இரண்டாவது நாளாக களை கட்டும் கடற்கரை உதைபந்தாட்டம்......

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடாத்தும் நிகழ்வுகள் மட்டக்களப்பில் 28ம், 29ம் திகதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் கடற்கரை உதைபந்தாட்டம் அனைவரது கவணத்தையும் ஈர்ந்துள்ளது. நேற்றைய தினம் (28) ஆரம்பமான இக்கடற்கரை உதைபந்தாட்ட போட்டிகளில் 27 ஆண்கள் அணிகளும், 04 பெண்கள் அணிகளும் மோதிக் கொள்கின்றன.

அந்த வகையில் இன்று 29ம் திகதி மட்டக்களப்பபு கடற்கரையில் இப்போட்டிகள் தொடரவுள்ளன, எனவே இறுதிப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த ஜயப்பாடுகளும் இல்லை ஏன் என்றால் மட்டக்களப்பில் பிரபல்யம் வாய்ந்த பல உதைபந்தாட்ட அணிகள் இப்போட்டியில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Comments