மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை..............

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை..............

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான (Way to Business Training Programme) பயிற்சிப் பட்டறை பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாவட்ட செயலக சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவின் மேற்பார்வை உத்தியோகத்தர் நிலோசன் வளவாளராகப் பங்கேற்று சிறு கைத்தொழில் உற்பத்தித் தெரிவு மற்றும் தரம், உற்பத்திகளின் பொதியில் காணப்பட வேண்டிய தன்மைகள், சந்தைப்படுத்தல் நுட்பங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக அறிவூட்டல்களையும் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கை வங்கி மட்டக்களப்பு நகர் கிளை முகாமையாளர் சிறு கைத்தொழில் முயற்சிக்காக கடனுதவிகளைப் பெறுவதற்கான வங்கி வாய்ப்புக்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரதேச சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments