கிழக்கு மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டியில், காத்தான்குடி மத்திய கல்லூரி அணி அசத்தல்......

 கிழக்கு மாகாண மட்ட உதைபந்தாட்ட போட்டியில், காத்தான்குடி மத்திய கல்லூரி அணி அசத்தல்......

17 வயதுக்குட்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டியில்இ மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடி மத்திய கல்லூரியும் கிண்ணியா அல் அக்ஸா வித்தியாலய அணியும் இறுதிப் போட்டியில் மோதிய நிலையில்,  2:0 என்ற கோல் கணக்கில், காத்தான்குடி மத்திய கல்லூரி அணி வெற்றியீட்டி, தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

மாகாண மட்டத்தில் சம்பியனான காத்தான்குடி மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணிக்கு பாடசாலை அதிபர் நிஹால் அஹமட் தலைமையில் நேற்று மாலை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments