மகளிர் காற்பந்தாட்ட கிழக்கு மாகாண மட்டத்தில் அம்பிளாந்துறை கலைமகள், கட்டுமுறிவுக்குளம் அ.த.க பாடசாலைகள் முதலாமிடம் ..........
மகளிர் காற்பந்தாட்ட கிழக்கு மாகாண மட்டத்தில் அம்பிளாந்துறை கலைமகள், கட்டுமுறிவுக்குளம் அ.த.க பாடசாலைகள் முதலாமிடம் ..........
2023ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் ஒரு அம்சமாக விளையாட்டு நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், மகளிர் காற்பந்தாட்ட போட்டிகள் கல்முனை வெஸ்லி பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்று இருந்தது இவ் காற்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய அணி முதலாமிடத்தை பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமையினை தேடிக்கொடுத்திருந்தனர்
அத்தோடு 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ககு/கட்டுமுறிவுக்குளம் அ.த.க பாடசாலை அணி முதலாவது இடத்தை பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமையினை தேடிக்கொடுத்திருந்தனர்.
இத்தோடு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலய அணி இரண்டாமிடத்தை பெற்று வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையினை தேடிக்கொடுத்திருந்தனர்.
இவ் அணிகள் இனிவரும் காலங்களில் தேசிய மட்ட போட்டிகளில் விளையாட தயாராகி வருகின்றனர். சில காலமாக மட்டக்களப்பு பாடசாலைகளில் பெண்கள் உதைபந்தாட்டம் ஓர் உயர்ச்சியை கண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவே இன்னும் இவ்வளர்ச்சி மேலோங்க அணைவரும் கைகோர்த்து ஒத்துழைப்போம்.
Comments
Post a Comment