கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள உள்ளக வீதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பு!!

 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை சுற்றியுள்ள உள்ளக வீதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பு!!

வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமையப்பெற்றுள்ள இடத்தை சுற்றியுள்ள இரண்டு கிலோமீட்டர் உள்ளக வீதிகள் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் செப்பனிடும் பணிகள் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வீதிகள், உலக வங்கியின் நிதி உதவியுடனும், அரசின் நேரடி பங்களிப்புடனும் கிழக்கு மாகாணத்தில் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி இரண்டு கிலோ மீட்டர் உள்ளக வீதிகளும் செப்பனிடப்பட்டு தற்பொழுது முற்றுப்பெற்றுள்ள நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்துள்ள போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் இராஜங்க அமைச்சருடன் இணைந்து சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்திருந்தார்.
இதன் போது நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் எம்எம்.பீ.கே.மாயாதுன்னே, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூ.பிரசாந்தன், அரச திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Comments