ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.......
பொலன்னறுவை - வெலிகந்தை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (ஒக்.30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் தனது கடமையை முடித்துவிட்டு அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் நிலைய விடுதியில் உறங்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே காலை 6 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் வலது கை மேற்பகுதியில் காயம் ஒன்று ஏற்பட்டு, அதிலிருந்து கடுமையாக இரத்தம் கசிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஹனீபா என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தடயவியல் பொலிஸ் பிரிவு மற்றும் வைத்திய அறிக்கையின் உதவியுடன் பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment