பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்கான வலையமட்டக் கலந்துரையாடல் ..............
பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்கான வலையமட்டக் கலந்துரையாடல் ..............
ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலகத்தின் பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை தவிர்ப்பதற்கான வலையமைப்புக்களின் கலந்துரையாடல் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் தலைமையில் (5) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் நிறுவனத்தின் இணைப்பாளர் சொர்ணலிங்கம், பால் மற்றும் பால்நிலை வன்முறைகள் தொடர்பான விதிமுறைக் குறிப்புகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
அத்துடன் பிரதேச மட்ட திட்டமிடல் வரைபைத் தயாரித்தலுக்கான முன்னாயத்தங்களும் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.
Comments
Post a Comment