வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் கலந்துரையாடல்.........

 வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் கலந்துரையாடல்.........

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் மூன்றாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் (10) பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது உள்ளகக் கணக்காய்வு அறிக்கை, பொதுக் கணக்குக் குழுவின் பரிந்துரைகளும் முன்னேற்றங்களும், நிதி ரீதியான முன்னேற்றங்கள் விடயங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் ரமேஷ் காயத்ரி, கணக்காளர் ஏ.மோகனகுமார், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.ருவைத், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம். தாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Comments