சிசு பல நலன்புரி திட்டத்தின் கீழ் மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் .....

 சிசு பல நலன்புரி திட்டத்தின் கீழ் மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் .....

சமுர்த்தி திணைகளம் மாணவர்களின் பாடசாலைக் கல்விக்கு உறுதுணை வழங்கும் நோக்குடன் நாடு பூராகவும் முன்னெடுத்து செல்லும் சிசு பல எனும் நலம்புரித் திட்டத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்/மமே/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் வித்தியாலய முதல்வர் மா. யோகேந்திரன்  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக வித்தியாலயத்தில் தரம் 5 ல் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு இவ் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.புவிராஜ் அவர்களும் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்  சி.தியாகராஜா அவர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








 

Comments