வெலிக்கந்தையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வைத்திய பரிசோதனை முகாம்............
வெளிக்கந்தை இராணுவ முகாமில் நடை பெறவுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கான இவ்வைத்திய பரிசோதனை முகாமில் கலந்து கொள்வற்காக தியாவட்டவான் கிராம சேவைப் பிரிவின் கிராமவாசிகள் 47 சிரேஷ்ட பிரஜைகளை வழியனுப்பி வைக்கும் வைபவம் தியவட்டவான் பிரதான வீதியில் (13) நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நாவலடி இராணுவ முகாம் வீரர்கள் சிரேஷ்ட பிரஜைகளுக்கான இவ் வைத்தியப் பரிசோதனை முகாமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக போக்குவரத்து, காலை உணவு மற்றும் வைத்திய பரிசோதனை போன்றவற்றை இராணுவத்தினர் அனுசரணையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் தியவட்டவான் கிராம உத்தியோகத்தர் எம்.எம்.அன்வர் சாதாத், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இராணுவ முகாம் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment