குடியியல் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ............

 குடியியல் உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ............

குடியியல் உரிமைகள், கடமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக சமூக விழிப்புணர்வூட்டும் செயலமர்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதரின் வழிகாட்டலிலும் ஒழுங்குபடுத்தலிலும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Cenre for Monitoring Elections Violence) ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (12) இடம்பெற்றது.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம். சுபியான் பிரதம அதிதியாகவும், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ஏ.எம்.எல்.விக்டர் மற்றும் மாவட்ட இணைப்பாளர் சியானி விஜயசுந்தர ஆகியோர் வளவாளர்களாகவும் பங்கேற்றனர்.
இதன் போது ஜனநாயகத்திற்கு தேர்தலின் அவசியம், தேர்தலுக்காகத் தயாராகுதல், ஜனநாயக உரிமைகள், பிரஜைகளின் பொறுப்புக்கள் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம், மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினருக்கும் சமமான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கான தேர்தல் சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மகளிர் சங்கங்கள், விசேட தேவையுடையோர் அமைப்புக்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், சமுர்த்தி மகா சங்கம் போன்றவற்றின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Comments