கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்தியநிபுணர் காலமானார்.

 கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்தியநிபுணர் காலமானார்......

கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்தியநிபுணர் என்ற பெருமையினைக்கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் தனது 84 ஆவது வயதில் காலமானார். 

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை தாரகமந்திரமாகக் கொண்டு தனது வாழ்நாளை வைத்தியசேவைக்காக அர்ப்பணித்த இவர், நீண்டகாலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணராக கடமை புரிந்து வந்துள்ளார். அத்துடன் இவர் யுத்த காலத்திலும் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவந்தவராவார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.


Comments