கோறளைப்பற்று பிரதேசத்தில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல்........

 கோறளைப்பற்று பிரதேசத்தில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல்........

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் இணைந்து மேற்கொண்ட டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களின் களப்பரிசோதனையில் குழாய் கிணறு பாவனை டெங்கு நோய் பரவுவதற்கான ஏதுவாக அமைவதனால் பயன்பாட்டை நிறுத்துதல், மலசல கூட கழிவுத்தொட்டிகளை கிணற்றிலிருந்து 40 மீற்றரை விட அதிக தூரத்தில் இருந்தால் மாத்திரமே கிணற்று நீரைக் குடிநீராக பயன்படுத்துதல் அத்துடன் தொழுநோய், காசநோய் போன்ற நோய்களின் பரவி வருவதால் அது குறித்து கவனம் செலுத்தல் வேண்டும்,
குறிப்பாக முகத்தில் தேமல் போன்று வெள்ளையாகக் காணப்பட்டு, எவ்வித உணர்வும் இல்லாதிருப்பின் அது தொழுநோயாக இருக்கலாம். அதற்குத் தோல் வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதுடன் 02 வாரங்களுக்கு மேலாக கடுமையான இருமல் இருப்பின் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுமாறு சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
வடிகான்கள் மூலம் சுத்தமான நீர் தேங்குவதால் டெங்கு நோய் பரவுகின்றன. அத்துடன் அசுத்தமான நீர் தேங்குவதால் அனோபிலிஸ், கியுலெஸ் நோய் நுளம்புகள் அதிகரிக்கின்றன, இதனைத் தடுப்பதற்காக வருடாந்தம் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள சகல காண்களும் துப்பரவு செய்யப்பட வேண்டும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி தெளிவுபடுத்தினார்.
இக்கருத்துக்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட அறிக்கை பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், காலை உணவு கோதுமை பாராட்டா, ரொட்டி போன்றவற்றுக்குப் பதிலாக கடலை, பயறு போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது..
அத்துடன் பாடசாலைகளின் மாதாந்த டெங்கு அறிக்கை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், சகல கிராம மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் இவ்டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பூரண பங்களிப்புக்களை வழங்குவதற்காக சுகதார வைத்திய அதிகாரி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். .

Comments