புனித மிக்கேல் கல்லூரியில் சசாங்கன் உயிரியல் பிரிவிலும், இமாயவன் கணிதம் பிரிவிலும் முதலிடம்.....
நேற்றைய தினம் (04) வெளியான 2022 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சைகள் முடிவுகளின் படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கணிதம் மற்றும் உயிரியல் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வசந்தமோகன் சசாங்கன் எனும் மாணவன் உயிரியல் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளதுடன், இப்பாடசாலையில் கல்வி கற்ற 8 மாணவர்கள் உயிரியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ளனர்.
அத்துடன் துரைராஜசிங்கம் இமாயவன் எனும் மாணவன் குறித்த பாடசாலையில் கணிதப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றதுடன் இப்பாடசாலையில் கல்வி கற்ற 14 மாணவர்கள் கணிதப்பிரிவில் பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment