வாழைச்சேனையில் வீட்டுத் திட்டம், காணி உறுதி வழங்கல் என்பன தொடர்பான காலந்துரையாடல் .............
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் மாவடிச்சேனை கிராமசேவகர் பிரிவில் வீட்டுத்திட்டம், காணி உறுதிகள் என்பன தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்கும் கலந்துரையாடல் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் மாவடிச்சேனை ஜூம்மாப்பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதன் போது மாவடிச்சேனை 208/A கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் 10 நபர்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணி உறுதிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் நளீர், காணி வெளிக்கள போதனாசிரியர் சமீம், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஜெஃபர், பிரிவு கிராம சேவை மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment