மட்டக்களப்பின் உதைபந்தாட்டத்தின் உயர்மலை ரெட்னா சரிந்து விட்டது......

 மட்டக்களப்பின் உதைபந்தாட்டத்தின் உயர்மலை ரெட்னா சரிந்து விட்டது......

மட்டக்களப்டபில் 1972ம் ஆண்டுகளில் தன்னை உதைபந்தாட்டத்தில் ஒரு ராஜாவாக திகழ செய்த மாணிக்கசிங்கம் ரெட்ணசிங்கம் அவர்கள் 09.09.2023 அன்று நம்மை விட்டு பிரிந்தார்.

நேற்று வரை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வலம் வந்து திரிந்த அந்த கால்கள் இன்றுடன் (09.09.2013) அஸ்தமனமாகி விட்டது. யார் வெபர் மைதானத்தில் உதைபந்தாட்ட போட்டி நடாத்தினாலும் மைதானத்தில் நின்று தன் பழைய அனுபவங்களை பகிர்ந்து ஊக்கப்படுத்துவதில் இவாருக்கு நிகர் இவரே.

அமரர் மாணிக்கசிங்கம் ரெட்ணசிங்கம் (ரெட்ணா ) அவர்கள்  1950.01.16ல் மட்டக்களப்பில் பிறந்தார். ஆரம்ப கல்வியை புனித சிசிலிய பெண்கள் பாடசாலையில் 8ம் தரம் வரை கற்று பின் புனித மிக்கல் கல்லூரியில் தன் கல்வியை தொடர்ந்தார்.

தனது 16வது வயதில் பாடுமீன் விளையாட்டு கழகத்தின் சார்பாக தன் கன்னி உதைபந்தாட்டத்தை தொடர்ந்த இவர் ஒரு வருட காலம் மைக்கல்மென் விளையாட்டு கழகத்திற்காகவும் தன்னை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும், இன்று வரை பாடுமீன் விளையாட்டு கழகத்திற்காக உழைத்து வரும் இவர் 1972 முதல் பாடுமீன் விளையாட்டு கழகத்தின் உதைபந்தாட்ட பயிற்ச்சியாளராக திகழ்கின்றார். 

இவரது பயிற்சியின் கீழ் 1982ம் ஆண்டு நடைபெற்ற 'நெஸ்டமோல்ட்' உதைபந்தாட்ட போட்டியில் மாவட்ட மட்டத்தில் பாடுமீன் விளையாட்டு கழகம் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது விசேட அம்சமாகும். இவர் உதைபந்தாட்ட விளையாட்டில் மாத்திரம் தன் திறமையை வெளிக்கொணரவில்லை மாறாக கூடைபந்தாட்டம், கிரிக்கெட், கரப்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தி பாடுமீன் விளையாட்டு கழகத்தை ஒரு உயரிய இடத்திற்கு கொண்டு சென்றவர் என்றால்இதை யாரும் மறுக்க முடியாத உண்மை எனலாம்.

நான் இறுதியாக வேல்முருகன் டிஸ்றிபியூட்டஸ் நிறுவனம் நடாத்திய பெண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது இப்போது அவர் சொன்னார் "அப்போதை உதைபந்தாட்டம் போல் இப்போது இல்லை, இப்போதைய உதைபந்தாட்டத்திற்கு இருக்கும் வசதி வாய்ப்பு அப்போது இருக்கவில்லை இருந்திருந்தால் இலங்கையிலேயே சிறந்த உதைபந்தாட்ட அணியாக மட்டக்களப்பு அணி இருந்திருக்கும்" என்றார்.

மட்டக்களப்பிற்கு இவரால் பல உதைபந்தாட்ட வீரர்கள் பிறந்துள்ளார்கள், பல பயிற்றுவிப்பாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள் ரெட்னா அண்ணன் மறைந்தாலும் இவர்களால் ரெட்ணா அண்ணனின் பெயர் மறையாது.



Comments