காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மீண்டும் இன்று திறக்கப்பட்டது......

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மீண்டும் இன்று திறக்கப்பட்டது......

திருத்த வேலை காரணமாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு, காத்தான்குடி பூர்வீக நூதன சாலை மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை செயலாளர்  ரிப்கான் ஷபீன் தெரிவித்துள்ளார்

காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் காத்தான்குடி பூர்விக நூதன சாலை கடந்த 4ம் திகதி  திருத்த வேலைகளுக்காக மூடப்பட்டது.

இன்று முதல் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணி வரையும் வெள்ளி சனி ஞாயிறு தினங்களிலும் பொது விடுமுறை தினங்களிலும் காலை 8:30 மணியில் இருந்து இரவு 9 மணி வரையும் நூதனசாலையை பார்வையிட முடியும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

Comments