முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய குடிநீர் இணைப்புக்கு பியுச்சர் லைப் நிறுவனம் உதவி...
மட்/மமே/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவைகளில் ஒன்றாகவும், அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் இனங்காணப்பட்டிருந்த குடிநீர் வசதிக்கான நீர்க் குழாய் இணைப்பு மற்றும் மலசல கூட மீள்நிர்மானம் என்பவை தொடர்பாக பியுச்சர் லைப் நிறுவனத்திடம் வித்தியாலய பழைய மாணவர்களும் பாடசாலை கல்விச் சமூகமும் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு குறித்த தேவைகளை 150,000ம் ரூபாய் செலவில் முறையாக நிறைவேற்றிக்கொடுத்துள்ளது. பியுச்சர் லைப் நிறுவனம்.
குறித்த நிறுவன பிரதிநிதிகள் இன்றைய தினம் (15) வித்தியாலயத்திற்கு நேரடியாக விஜயம் செய்து நிறைவேற்றப்பட்ட வேலைகள் தொடர்பில் அவதானித்ததுடன், இதற்காக செலவிடப்பட்ட நிதிக்கான காசோலையினை வித்தியாலய முதல்வர் மா.யோகேந்திரன் அவர்களிடம் கையளித்தனர்.
Comments
Post a Comment